twitter


                   நீங்கள் காரோ, பைக்கோ வைத்திருந்தால் அதை விற்கப்போகும் போது உங்களிடம் கேட்பார்கள் இது எந்த வருஷத்து மாடல்? என்று.விற்பனைக்கு வந்துள்ள வருஷத்தையும் அதன் பயன்பாட்டையும் வைத்துதான் அதற்கு மதிப்பு.


                         உங்களின் மதிப்பை நீங்கள் அறிய வேண்டும். அதனால் தான் உங்களை கேட்கிறேன் நீங்கள் எந்த வருஷத்து மாடல்?.மாடலை தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிறீர்களா?



                            டூ வீலர், கார், செல்போன் ஆகியவற்றை காலத்திற்கேற்ப லேட்டஸ்ட் ஆக மாற்றிக்கொள்கிறோம். ஆடைகளில் கூட லேட்டஸ்ட் டிசைன் களைத்தான் விரும்புகிறோம். பழைய மாடல் காரில் சென்றால் அவரை வித்தியாசமாக பார்க்கிறோம்.பழைய மாடல் செல்போன் வைத்திருந்தால் அவரை ஏற இறங்க பார்க்கிறோம். ஆனால் நாம் எப்படிப்பட்டவர் நம்மை மற்றவர்கள் எவ்வாறு பார்கிறார்கள் என்று நாம் அறிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.


                               கருவிகள் மட்டுமல்ல அதை பயன்படுத்தும் நாமும் லேட்டஸ்ட் மாடலாக இருக்க வேண்டாமா? நம் உடைகள் மட்டும் நவீனமாக இருந்தால் போதாது நம் சிந்தனைகளும் நவீனமாகவும் நம்பிக்கை மிக்கதாகவும் இருக்க வேண்டும்.


                             கீழே உள்ள கேள்விகளை உங்களிடமே கேட்டுக் கொண்டு நீங்கள் எந்த வருஷத்து மாடல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* தாழ்வு மனப்பான்மையும், விரக்தி மனப்பான்மையும் கொண்டவராக இருந்தால் நீங்கள் காலாவதியான் அரதப்பழசான மாடல்.


* எதைப்பேசினாலும் என்னால் முடியாது. இதெல்லாம் நடக்காது என்று பேசுபவராக இருந்தால் நீங்கள் ரொம்ப பழைய மாடல்.


* மிகப் பிரகாசமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளும், உறுதியும் கொண்டவராக செயல்பட்டால் நீங்கள் லேட்டஸ்ட் மாடல்.


* உலக அளவில் வெற்றிபெற முயற்சி செய்தால் நீங்கள் ப்யூச்சர் மாடல்.


இப்பொழுது சொல்லுங்கள்  நீங்கள் எந்த வருஷத்து மாடல் ?

Feb 8, 2011 | 4 comments | Labels:

4 comments:

  1. sathishsangkavi.blogspot.com
    Feb 8, 2011, 9:56:00 AM

    நல்ல தகவல் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

  1. தமிழ் 007
    Feb 9, 2011, 11:35:00 AM

    உங்கள் கருத்தை இங்கு பதிவு செய்ததற்கு நன்றி "சங்கவி".
    நீங்கள் .com ஆரம்பித்துள்ளதாக உங்கள் தளத்தில் கூறியுள்ளீர்கள் ஆனால் .com பெயரை குறிப்பிடவில்லையே?

  1. சகாதேவன்
    Feb 9, 2011, 8:13:00 PM

    //அரதப்பழசான மாடல்//
    1940 வரை வந்த கார்களை வின்டேஜ் கார் என்று கொண்டாடுகிறார்கள்.
    அந்த அழகு கம்பீரம் எல்லாம் இப்போதில்லை
    //ரொம்ப பழைய மாடல்//
    40க்குப் பின் வந்த கார்களை க்ளாஸிக் கார் என்கிறார்கள்.
    காரை தூரத்தில் பார்த்தாலே ப்ளிமத் செவர்லே ஃபோர்ட் என்று சொல்ல முடியும்.
    தனித்துவம் இருக்கும்.
    //லேட்டஸ்ட் மாடல்//
    மேலே சொன்ன எதுவும் புதிய கார்களில் காணமுடிவதில்லை. அருகில் சென்று லோகோ பார்த்தால்தான் என்ன கார் என்று தெரியும். அதிவேகம் செல்கிறது. சர்வீஸ் செய்ய கம்ப்யூட்டர் தேவை. மனித மூளைக்கு இனி வேலை இல்லை போலும்.
    //ப்யூச்சர் மாடல்//
    காரில் ஸ்டியரிங் வீல் இருக்காது. ஏறி உட்கார்ந்து மதுரை போ என்று சொன்னால் அது விர்ரென்று போய் நாம் தூங்கிவிட்டாலும் மதுரை வந்து விட்டது எழுந்திரு என்று சொல்லுமோ என்னவோ.
    கார்களைப் பற்றி தப்பா சொல்லாதீர்கள். என்
    http://vedivaalblogspot.com/2008/08/1941.htm
    பதிவை பார்த்து கமெண்ட் எழுதுங்களேன். நான் 1941 மாடல்

  1. தமிழ் 007
    Feb 9, 2011, 9:09:00 PM

    சகா தேவன் நண்பரே !
    உங்களின் விளக்கமான கருத்துக்கு நன்றி!
    உங்கள் தளத்தினை (வெடிவால்) பார்த்தேன் நன்றாக இருந்தது.