twitter


                                                         சன் டிவி பேனரில் ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ள படம் தான் 'தென்னாட்டு புரூஸ்லி' தனுஷ் நடித்த "மாப்பிள்ளை "படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை நேற்று சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். அது இசை வெளியீட்டு விழாவா இல்லை தனுஷின் பெருமை பேசும் விழாவா என்றே தெரியவில்லை. வழக்கமாக "கலாநிதி மாறனை" புகழும் வாய்கள் அனைத்தும் தனுஷையே புகழ்ந்து கொண்டிருந்தது.



                                                      சிறப்பு அழைப்பாளர்கள் என்று பார்த்தால் இராம நாராயணன், ஜெயம் ரவி மற்றும் பரத் மட்டுமே. பெரிய விருந்தினர்கள் யாரும் வரவில்லை . இவர்கள் பேசினால் தனுஷை புகழ்கிறார்கள். தனுஷ் பேசினால் அவர்களை புகழ்கிறார். 



                                                        அட படத்தை பற்றியோ இசையமைப்பை பற்றியோ சொல்லுங்கடான்னா எவனும் அதப்பத்தி பேச மாட்டேங்கிறானுங்க. 


                                                    தனுஷ் ரொம்ப நல்லவரு, வல்லவரு, நாலுந் தெரிஞ்சவரு, அப்படி இப்படீன்னு கிழி கிழின்னு கிழிக்கிறானுங்க நம்ம காத!


                                                     ஒரு 150 காலேஜ் பசங்களை கூட்டியாந்து பின்னாடி உட்கார வச்சு கத்த விடுரானுங்க கேட்டா ரசிகர்னு சொல்லுரானுங்க. கடைசி வரைக்கும் போட்ட பிரியாணிக்கும், கொடுத்த காசுக்கும் விசுவாசமா நடந்துக்கிட்டானுங்க அந்த பசங்க.



                                                   அப்புறம்  ஏண்டா  அதப்பாத்த சேனலை மாத்த வேண்டியதானே இல்லை டிவிய ஆப் பண்ண வேண்டியதானடா அப்படீன்னு ஒரு கேள்விய நீங்க என்னைப் பார்த்து கேட்கலாம். அதுக்கு காரணம் ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி தான் அது மட்டுமில்ல  மேடையில படத்தோட பாடல்களுக்கெல்லாம் டான்ஸ் ஆடின பொண்ணுங்க எல்லாம் ரொம்ப கிளாமரா ஆடினாங்க. ( ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு).


                                                    தனுஷோட மாமியாரா நடிச்சு இருக்கிறது நம்ம "மனிஷா கொய்ராலா" தான். டிரெய்லர்லேயே பார்க்க சகிக்கல. சரியா தூசி தட்டாம விட்டுட்டானுங்க போல. படம் எப்படியும் ஹிட்டாயிடும் இல்லைன்னா ஹிட் ஆக்கப்படும். தேர்தல்ல ஓட்டப் போட்டுட்டு ரிலாக்ஸா உட்காட்ந்து பார்கலாம்.


இயக்கம் : சுராஜ் (தலைநகரம், மருதமலை, படிக்காதவன்)


இசை : மணி சர்மா


Mar 28, 2011 | 26 comments | Labels: , , ,

                                       கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் "வெள்ளாவி" அழகி தாப்ஸி தான். ஆனால் இப்போது தாப்ஸி காய்ச்சல் ஓய்ந்து விட்டது.

Mar 27, 2011 | 19 comments | Labels: , ,

கலைஞர் பெற்றது "கனிமொழி"
கலைஞர் வளர்த்தது "தமிழ்மொழி"

அம்மா வந்தா நிக்கனும் குனிஞ்சு
இல்லாட்டி போயிடுவ அழிஞ்சு


ராசா தின்னுறாரு "களி"
அதுக்கு காரணம் "மொழி"

அய்யா நிக்கிறது திருவாரூரு
மெய்யா ஜெயிச்சு வருவர் பாரு!


ஶ்ரீரங்கத்துல நிக்கிறாங்க அம்மா
எதுத்து நிக்கிறவனெல்லாம் சும்மா


மூணு மணிக்கு போடுவாங்க டாப்டென்
முப்பதுலயாச்சும் ஜெயிப்பாரா கேப்டன்

ஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி


ஊறுகாய் :

நடிகை மோனிகா வெப்சைட் மற்றும் ப்ளாக் தொடங்கி இருப்பதாகவும் முகவரி தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும் என சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த  தகவலை தந்த நண்பர் RaveePandian அவர்களுக்கு நன்றி.

மோனிகாவின்

வெப்சைட் முகவரி :  http://www.actressmonika.com/

ப்ளாக் முகவரி : http://actressmonika.blogspot.com/ 






                                       தி.மு.க. வின் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்திருந்த போஸ் என்பவர் நேர்கணல் அறைக்குள் வந்தவுடன் கலைஞர் அவரைப் பார்த்து உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் உட்காராமல் பாதி குனிந்த நிலையில் நின்று கொண்டு பவ்யம் காட்டியுள்ளார். அப்போது அவர் தலைவரே! நான் 35 வருஷம் கட்சியில இருக்கேன், 22 முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன் எப்படியாவது எனக்கு இந்த முறை சீட் கொடுங்க தலைவரே! என்று கூறி அழுதே விட்டாரம்.

Mar 22, 2011 | 27 comments | Labels: , ,


                    விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் "சட்டப்படி குற்றம்" . இந்தப்படம் நிச்சயம் அரசியல் வட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சயை கிளப்பும்.


               இந்தப்படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை காட்டப்படுகிறது. இந்தக் காட்சியில் வருபவர் ஆ.ராசாவின் முகச்சாயலில் இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞராக சீமான் நடிக்கிறார். ஆனால் ஊழல் தொகை எவ்வளவு தெரியுமா? 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி.



                                   சத்யராஜ் இந்தப்படத்தில் புரட்சியாளர் சேகுவேரா வேடத்தில் நடித்து இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பல வசனங்கள்  இடம்பெற்றுள்ளது.


                                    எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மகன்கள் செய்யும் அட்டகாசங்களும் காட்டப்படுகிறது.


                                நிறைய காட்சிகள் தற்கால அரசியலையும், குறிப்பாக ஆளுங்கட்சியினையும் தாக்கும் வகையில் உள்ளது.

                                 இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் தான் நடந்தது. அதில் இயக்குனர்கள் சங்கர், செல்வமணி, சீமான் மற்றும் நடிகர்ள் சத்தியராஜ், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                சுவாமிஜி நித்தியானந்தரின் திருவிளையாடலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. நிந்தியானந்தா வேடத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் பல சர்ச்சைகளை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
Mar 21, 2011 | 19 comments | Labels: ,


தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

                                               நடிகை மோனிகா தனி வெப்சைட் தொடங்கியுள்ளார். அதில் தன்னை பற்றிய தகவல்களை தமிழில் குறிப்பிட்டுள்ள அவர், தன் கருத்துக்களை பதிவு செய்ய தனி ப்ளாக்கும் தொடங்கி உள்ளார்.

                                                                   யாருக்காவது இவருடைய வெப்சைட் மற்றும் ப்ளாக் முகவரி தெரிந்தால் அனைவருக்கும் சொல்லவும். நீங்கள் மட்டும் தனியாக சென்று பின்னூட்டத்தையும் ஓட்டையும் போட்டுவிட்டு இளித்துக் கொண்டு இருக்காதீர்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கவனித்தீர்களா மக்களே!


                  ஆனந்தா என்கிற பேருக்கும் சாமியார்களுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை. ஏன் சாமியார் ஆனவுடன் ஆனந்தா என்று பின்னால் சேர்ந்துக் கொள்கிறார்கள் என்று ரொம்ப நாளா எனக்கு சந்தேகம்.

பிரேமானந்தா
நித்தியானந்தா

இவனுங்க ரெண்டு பேரும் மாட்டுனதுக்கு அப்புறந்தான் தெரிஞ்சுச்சு.

இனிமே என் பேரு தமிழானந்தா007 !!!!!!

மாட்டுற வரை ஜாலி! மாட்டிக்கிட்டா களி!      "தட்ஸ் ஆல்"

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

முக்கிய அறிவிப்பு :



நான் பதிவுலகுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிடுச்சு இன்னும் பெண் தோழிகள் யாரும் கிடைக்கவில்லை.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. 

இந்த அறிவிப்பை படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால் தோழியாவது பற்றி பரிசீலிக்கவும். ஆணாக இருந்தால் தங்களுக்கு தெரிந்த பெண் தோழிகளிடம் இந்த அறிவிப்பை பற்றி தெரிவிக்கவும்.

பெண்கள் பெயரில் செயல்படும் ஆண்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

வாங்க பழகலாம்.( நிபந்தனைகளுக்கு உட்பட்டது ).

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பேனாக்களின் சிறப்பு என்ன தெரியுமா?





 பேனாக்களுக்கு உலகின் அனைத்து மொழிகளும் தெரியும்.
எந்த மொழியாக இருந்தாலும் எழுதும். ஆனால் நாம் அப்படியா? 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அழகு :



Mar 14, 2011 | 28 comments | Labels:

நண்பர்களே!

தேர்தல்களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதால் அரசியல் பதிவெழுதும் நமக்கெல்லாம் கொண்டாட்டம் தான். தினமும் அல்ல மணிக்கொருமுறை பதிவு எழுதுவதற்கு ஆயிரம் விஷயம் கிடைக்கும்.

எந்த அரசியல்வாதியையாவது போட்டு கிழி கிழி என கிழித்துக் கொண்டிருப்போம். முதல்வரிலிருந்து, பிரதமர் வரை யாரை வேண்டுமானாலும் நாம் பதிவெழுதி நாறடிக்கலாம்.



ஆனால் குறிப்பிட்ட மூன்று பேரை பற்றி மட்டும் நாம் ஒரு வார்த்தை கூட தவறாக எழுதக்கூடாது நண்பர்களே! ஒரு வேளை இந்த குறிப்பிட்ட மூன்று நபர்களை  பற்றி நாம் ஏதாவது திட்டி எழுதி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் யாராவது பார்க்கக் கூடாதவர்கள் பார்த்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டால் நம்ம கதி அதோ கதி தான்.

யார் அந்த மூன்று நபர்கள் :


1. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

2. தலைமை தேர்தல் ஆணையர்.

3. குடியரசுத் தலைவர்

இதற்கு எடுத்துக்காட்டாய் சிறிது நாட்களுக்கு முன்பு கூட ராஜஸ்தானில் ஒரு அரசியல்வாதி ஜனாதிபதியை பற்றி பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாக பேசி அதனால் தனது பதவியை இழந்து சிறை சென்றார்.



தற்போது கூட தேர்தல் தேதியில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருப்பதால்  "தட்டிக்கேட்க ஆள் இல்லை என்பதற்காக இவர்கள் இஷ்டத்துக்கு முடிவு எடுப்பார்களா? இவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவித்தும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே!" என்று சிலர் பொங்கி இருப்போம்.

மேலே படத்தில் இருக்கும் மூன்று இடங்களை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் மானங்கெட திட்ட நமக்கு உரிமை உண்டு.

இந்தப் பதிவின் நோக்கம் நம் நண்பர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.  நண்பர்களே உஷாராக இருங்கள் வம்பை விலை கொடுத்து வாங்கி விடாதீர்கள்.
Mar 11, 2011 | 51 comments | Labels: ,


                    தான் காதலிக்கும் பொண்ணுங்களிடம் நம்ம பசங்க "நீ தான் உயிர்", "உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றெல்லாம் டயலாக் விட்டுக் கொண்டிருப்பார்கள்.


ஆனா பொண்ணுங்களே! இவனுங்களை மட்டும் நம்பாதீங்க!



                                             இனிமே இந்த மாதிரி டயலாக்கை எவனாவது உங்களிடம் சொன்னால் நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என நம்ம "கவுண்டமணி" அண்ணன் சொல்லி இருக்கிறார். இனிமே நீங்களும் இதையே பாலோ பண்ணுங்க!

பையன் :   "கண்ணே! உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்"

கவுண்டமணி : பரதேசி பன்னாடை நாயி! தலையில இருக்கிற மயிர கொடுக்கவே பல தடவை யோசிக்கும் இந்த லட்சனத்துல உயிர கொடுக்குதாம். குறுக்குலையே எட்டி மிதிச் புடுவேன் ஒழுங்கா ஓடியே போயிடு!

பையன் : "உன்ன மகாராணி மாதிரி வச்சு காப்பாத்துவேன்"

கவுண்டமணி : ஆமா, இவரு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ். நாலு தெருவுல பொறுக்கித் தின்னுக்கிட்டு திரியுது நாயி இது மகாராணி மாதிரி வச்சு காப்பாத்துமாம்.

போ! நாயே! போய் அடுத்த வேலை சோத்துக்கு வழி இருக்குதான்னு பாரு!

பையன் : "நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்கமுடியாது"

கவுண்டமணி : நெனச்சு பார்க்க முடியலைன்னா! போய் தண்ணியில நனைச்சு பாரு நாயே! 

பையன் : "நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன்"

கவுண்டமணி : அட கோமுட்டி தலையா! மொதல்ல ஒரு சோப்பு டப்பா வாங்க உனக்க வக்கு இருக்காடா? கையில நாலனா காசு இல்லாத பிச்சக்கார நாயி நீ எதக்கேட்டாலும் வாங்கித் தந்திடுவையா?



பையன் : "என்னோட மனசெல்லாம உன்னோட நினைப்புத்தான் நிறைஞ்சிருக்கு!"

கவுண்டமணி : ஏன்டா புறம்போக்கு நாயே! உன் மனசு என்ன ஏரியா? குளமா?  பூராம் நிறைச்சிருக்க!

ஒழுங்க ஓடிப்போயிடு! இல்லைனா அருவாள எடுத்து மனசுலேயே கொத்தி பொத்துவிட்டுருவேன்.

பையன் : "உன்னோட கையால விஷத்தை கொடுத்தாலும் குடுச்சிடுவேன்"

கவுண்டமணி : மொதல்ல அதச்செய்யுடா! ஊருக்குள்ள ஒரு சொட்ட நாயி செத்துபோச்சுன்னு எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க!



இன்னும் நிறைய டயலாக் இருக்குது அதெல்லாத்தையும் எழுதனுமுன்னா இந்த பதிவு பத்தாது. அதனால முடிஞ்சா இன்னொரு டைம் எழுதுவோம்.



தேர்தல் களம் :


எல்லோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

தமிழ்மணம்      -      7 ஓட்டு

இன்ட்லி             -      16 ஓட்டு

தமிழ்10                -      9 ஓட்டு

உலவு                   -     4 ஓட்டு

பாலோயர்          -     1000 பேர்


இந்த எண்ணிக்கையில் ஏதாவது குறையாக இருந்தால் தயவுசெய்து தங்களது பங்கை நிரப்பி விட்டு போகவும்.( இதான் நம்ம ஓட்டு கேட்குற ஸ்டைல் )
Mar 10, 2011 | 45 comments | Labels:


                                       ஒரு நாள் உடம்பு சரியில்லையின்னு டாக்டர்கிட்ட போனேன். டாக்டர் செக் பண்ணிவிட்டு தன்னுடைய நர்ஸை அழைத்து ஏதோ மருந்து பேர சொல்லி அத இவருக்கு போடு, அப்புறம் மஞ்சள் மாத்திரை, சிவப்பு மாத்திரை, சின்ன வெள்ளை மாத்திரை எல்லாத்தையும் ரெண்டு நாளைக்கு கொடு என்றார்.

Mar 7, 2011 | 13 comments | Labels: ,


பிரபல வலைப்பதிவர்கள் சண்டை என வந்தால் என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்கள்  என்று ஒரு கற்பனை .....


தமிழ்மணம் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சி.பி.செந்தில் குமாரின் பஞ்ச் டயலாக்குகள்...

என் ப்ளாக் பேரு அட்ரா சக்க
ஏங்கிட்ட மோதினா நீ ஆயிடுவ வெறும் சக்க!


ஏ... ஊரு ஈரோடு பக்கம்
நான் அடிச்சா போயிடுவ ஆஸ்பத்திரி பக்கம்!

நான் எழுதுற ஜோக்கெல்லாம மொக்க
எமனே பயப்படுவான் என் எதிர்ல நிக்க!

ஜாக்கி சேகர் :

டேய் ஏம் பேரு ஜாக்கி
ஏங்கூட மோதினா போட்டுருவேன் தூக்கி

கேபிள் சங்கர் :

நான் எழுதுறது கொத்துப்பரோட்டா
ஏங்கிட்ட மோதினா உன்ன கொத்தி போட்டுருவேன் பரோட்டா!

நல்ல நேரம் ஆர்.கே. சதீஸ்குமார்

என் ப்ளாக் பேரு நல்ல நேரம்
ஏங்கிட்ட மோதினா உனக்கு கெட்ட நேரம்

#கவிதை வீதி# சௌந்தர்


நான் எழுதுறது கவிதை வீதியில
நான் அடிச்சா போய் விழுவ நடு வீதியில...

வேடந்தாங்கல் - கருன்

என் ஸ்டடி சென்டர் பேரு  சக்தி
ஏங்கிட்ட மோதினா போட்டுருவேன் குத்தி


ஐய்யயோ! நான் ஏற்கனவே விஜய் மாதிரி சூப்பர் பஞ்ச் டயலாக் வச்சிருக்கேனே! என பீல் பண்ணுகிறவர்கள் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.


நான் என்ன பஞ்ச் டயலாக் பேசுறதுன்னு யாராவது என் கூட மோதும் போது எழுதலாமுன்னு விட்டுட்டேன். (ஹிஹி....ஹிஹி)

யாருக்காவது தில் இல்லைன்னா ஏங்கூட மோத வாங்க!
தில் இருந்தா அப்படியே போயிருங்க!

நானும் பிரபல பதிவர் தான் என்னைப்பத்தி ஏன் எழுதவில்லை என்று என்மேல் யாருக்காவது கோபம் வந்தால் நமீதாவின் முகத்திற்காகவாவது என்னை மன்னிக்கவும்.


Mar 6, 2011 | 36 comments | Labels:
சி.பி.ஐ : நீங்க ஊழல் செஞ்ச மொத்த பணமும் எங்கே?

ஆ.ராசா :  கலைஞர் கிட்டத்தான் கொடுத்தேன்

சி.பி.ஐ :    எல்லாப் பணத்தையும் ஏன் அவர்கிட்ட கொடுத்திட்டீங்க?


ஆ.ராசா : அவர்தான் சொன்னாரு "மணி"(money) எல்லாத்தையும் நான் வச்சிக்கிறேன். "கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு.

சி.பி.ஐ : !!!!!!!!!!!!!. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

ஆ.ராசா : பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. அதனால ஒத்துக்கிட்டேன்.

சி.பி.ஐ. : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Mar 3, 2011 | 39 comments | Labels:

                                       சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் "தென்றல்". இதில் கதாநாயகனின் அம்மாவாக வரும் பெண்ணின் செயல்பாடுகள் மிகவும் கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலை பற்றி தெரியாதவர்களுக்காக 

ஒரு சின்ன கதை சுருக்கம்.

இந்த கதையில் வரும் நாயகனுக்கு அவரது அம்மா ஒரு பணக்கார வீட்டில் பெண் பார்க்கிறார். தனது மகளுக்கும் அதே வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்.அதாவது பெண் கொடுத்து பெண் எடுக்கிறாள். இருவருக்கும் ஒரே தேதியில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.( கதாநாயகனின் குடும்பம் நடுத்தர வர்க்கம்)

ஆனால் "தமிழ்" என்ற கதாநாயகன் கதாநாயகிய வரும் "துளசி" என்ற ஏழை வீட்டு பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் அவசர திருமணம் செய்து கொள்கிறான். இதனால் கதாநாயகனின் தங்கை கல்யாணமும் நின்று விடுகிறது. கதாநாயகனும் கதாநாயகியும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.



கதாநாயகனுக்கு நிச்சயக்கப்பட்ட "சாரு" என்ற பெண்ணால் இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை.  எப்படியாவது காதாநாயகனை அடைய துடிக்கிறாள். இதற்காக கதாநாயகனின் அம்மாவிடம் சென்று அவர்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்கிறாள். 

இதற்கான காரணம் தனது மகனை அடைய துடிப்பது தான்  என தெரிய வரும் போது அந்த அம்மா "சாரு" என்ற பெண்ணுக்கு தனது மருமகளை மகனிடமிருந்து பிரித்து தனது மகனை உன்னிடம் சேர்ப்பதாக உறுதியளிக்கிறார். ஏனென்றால் இவள் பணக்கார பெண் இவளால் தனக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது என்பதற்காக. இதற்காக "ஷாரு" என்ற அந்த பெண்ணும் அந்த கதாநாயகனின் அம்மாவும் சேர்ந்து தீட்டும் திட்டங்களும் பேசும் வசனங்களும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இப்படியும் ஒரு கேவலமான அம்மா எவளாவது இருப்பளா?. தனது மகனுக்கே "மாமா" வேலை பார்ப்பது போல் அந்த அம்மாவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 



உயிர் படத்தில் சங்கீதா தனது கணவனின் தம்பி மேல் ஆசைப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டதற்கே எதிர்ப்பு தெரிவித்த இந்த சமூகம் பல பெண்களால் விரும்பி பார்க்கப்படும் டி.வி. சீரியலில் அம்மா போன்ற புனிதமான உறவுகளை இப்படி கேவலமாக சித்தரிப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு கதை எழுதுவது யார் தெரியுமா விகடன் கதைக்குழுவாம்.


Mar 1, 2011 | 21 comments | Labels:
 வெற்றி

பாறைகளின் இடுக்குகளில்
முளைத்திருப்பது
தாவரங்கள் அல்ல
தன்னம்பிக்கை
தேன் கூட்டில்
இனிப்பது தேனல்ல
உழைப்பு
கூட்டைப் பிளந்து வெளியே
வருவது குஞ்சுகளல்ல
விடாமுயற்சி

Feb 28, 2011 | 25 comments | Labels:
 நாங்க எப்பவும் கிடைச்சத வச்சு சந்தோஷமா இருப்போம்!


Feb 25, 2011 | 6 comments | Labels:
                                       1848 - ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தங்கவேட்டை ஏகத்துக்கும் பிஸியாக நடந்து கொண்டிருந்தது. பலர், சுரங்கங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார்.
அவர் கொண்டு சென்ற எல்லா வகை துணிகளும் விற்றுத்தீர்ந்தன ஆனால் கேன்வாஸ் துணி மட்டும் அப்படியே இருந்தது.

Feb 23, 2011 | 12 comments | Labels:
                                                       போட்டி நிறைந்த இந்த உலகில்  ஆளுக்கொரு லட்சியம் இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். வாய்ப்பு என்பது, ரோட்டுக் கடையில் கிடைக்கும் வடையைப்போல எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

வாய்ப்புகளை தட்டிப்பறிக்க லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.

Feb 22, 2011 | 5 comments | Labels:



என்ன கொடுமை சார் இது?


நிலவை நேசித்தேன்
தேய்ந்து போனது
மலரை நேசித்தேன்
வாடிப் போனது
கார்மேகத்தை நேசித்தேன்
மழையாகி போனது
பறவையை நேசித்தேன்
Feb 19, 2011 | 10 comments | Labels:




 என்னங்கடா இது.. "ஷேர் ஆட்டோ"வை விட மோசமா இருக்கு.

Feb 18, 2011 | 8 comments | Labels:

                                                    கண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக திகழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றி ரகசியம் என்பது அவர் பின்பற்றிய கொள்கைகளில் தான் உள்ளது. அவர் விடாப்பிடியாக பின்பற்றிய  கொள்கைகளில் சில... இதோ உங்களுக்காக!





Feb 17, 2011 | 5 comments | Labels:

பால்! பாழ்!




வாழ்க்கையை
பாலாக்கி பருகுவதும்
பாழாக்கி மருகுவதும்
நம் கையில்...


Feb 16, 2011 | 6 comments | Labels:

                              பாரசீகத்தின் மீது அலெக்சாண்டர் படையெடுத்த போது, சிட்னஸ் நதிக்கரையில் தங்கியிருந்தார். அந்த சமயம் அலெக்சாண்டரை விசித்திரமான காய்ச்சல் தாக்கியது. அவருடன் வந்த கிரேக்க மருத்துவர்களுக்கு அந்த காய்ச்சலின் தன்மை புரிய வில்லை. 



Feb 15, 2011 | 7 comments | Labels:


                                                சூடாய் ஒரு கப் காபி! நம்மில் பலருக்கு காலையில் இதை குடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும். பலர் " காபி ரெடி " என்ற குரல் கேட்ட பின் தான் படுக்கையிலிருந்தே எழுவர். நம் எல்லோரையும் இப்படி அடிமைப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காபியின் 'கமகமக்கும்' தகவல்களை தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Feb 14, 2011 | 3 comments | Labels:

                                                       வாழ்க்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் இதோ உங்களுக்காக!. தயவு செய்து  இவற்றை படிக்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள்  அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையை பார்க்கும் விதம் நிச்சயம் மாறும்.

| 0 comments | Labels:

1. ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்கக் கூடியவனாக இருந்தால் மட்டுமே நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.




Feb 11, 2011 | 0 comments | Labels:


YAHOO :
                                                  ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய குலிவர்ஸ் டிராவல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இது . துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை தன் இணையத்திற்கு வைத்து விட்டார்கள், YAHOO - வை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.

Feb 10, 2011 | 4 comments | Labels:

                         ஒரு நேர்காணாலில் பொதுவாக நம்மிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகளாக ஆய்வாளர்கள் கூறும் பத்து தகுதிகளைத்தான் கீழே கூறியுள்ளேன் இதில் எத்தனை நம்மிடம் உள்ளது என பொருத்தம்  பார்த்துக் கொள்ளுங்கள்.




Feb 9, 2011 | 5 comments | Labels:

சாதிக்க வயது தடையில்லை என்பார்கள். இப்போது சில சாதனையாளர்கள் சாதித்த போது அவர்களின் வயது என்னவென்று தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்.

*  பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது அவரது வயது 20.


| 4 comments | Labels:

                   நீங்கள் காரோ, பைக்கோ வைத்திருந்தால் அதை விற்கப்போகும் போது உங்களிடம் கேட்பார்கள் இது எந்த வருஷத்து மாடல்? என்று.விற்பனைக்கு வந்துள்ள வருஷத்தையும் அதன் பயன்பாட்டையும் வைத்துதான் அதற்கு மதிப்பு.


                         உங்களின் மதிப்பை நீங்கள் அறிய வேண்டும். அதனால் தான் உங்களை கேட்கிறேன் நீங்கள் எந்த வருஷத்து மாடல்?.மாடலை தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிறீர்களா?

Feb 8, 2011 | 4 comments | Labels:

நமது கணினியில் சில போல்டர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும். நம்முடைய கிரடிட் கார்டு விபரங்கள், வங்கி விபரங்கள், பயோடேட்டாக்கள், குடும்ப புகைப்படங்கள், இது போன்ற இன்னும் பல விபரங்களை ரகசியமாக பாதுகாக்க நினைப்போம்.



Feb 4, 2011 | 0 comments | Labels:


 எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பினை  நமது கணினியில் பதிந்து இயக்க கணினியின் ஹார்டுவேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு இது. 


Feb 1, 2011 | 0 comments | Labels:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நாம் அனைவருமே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்...
நமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும், சிக்கல் தான். இனி அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம்.

Jan 28, 2011 | 1 comments | Labels: