twitter



 எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பினை  நமது கணினியில் பதிந்து இயக்க கணினியின் ஹார்டுவேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு இது. 




 உங்கள் கணினியில் ஏற்கனவே எம்.எஸ்.ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கணினியில் எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 - 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் இயங்கும்.

விண்டோஸ் எக்ஸ் பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3.

விஸ்டா எஸ்.பி.1.

விண்டோஸ் 7.

விண்டோஸ் சர்வர் 2008.

விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 ( எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன் ).


எம்.எஸ்.ஆபீஸ் 2010 - 64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்சம் 500 ஏத் ப்ராசசர் 256 MB RAM மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 GB வரை தேவைப்படும். மேலும் மைக்ரோசாப்ட் Direct X 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 MB வீடியோ மெமரியுடன் தேவைப்படும்.

மேல குறிப்பிட்ட எல்லைகளுக்குள் உங்கள் கணினி இருந்தால் நிச்சயம் அதில் எம்.எஸ்.ஆபிஸ்-2010 பதிப்பினை பதிந்து இயக்கலாம்.
Feb 1, 2011 | 0 comments | Labels:

0 comments: