twitter


                                                         சன் டிவி பேனரில் ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ள படம் தான் 'தென்னாட்டு புரூஸ்லி' தனுஷ் நடித்த "மாப்பிள்ளை "படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை நேற்று சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். அது இசை வெளியீட்டு விழாவா இல்லை தனுஷின் பெருமை பேசும் விழாவா என்றே தெரியவில்லை. வழக்கமாக "கலாநிதி மாறனை" புகழும் வாய்கள் அனைத்தும் தனுஷையே புகழ்ந்து கொண்டிருந்தது.



                                                      சிறப்பு அழைப்பாளர்கள் என்று பார்த்தால் இராம நாராயணன், ஜெயம் ரவி மற்றும் பரத் மட்டுமே. பெரிய விருந்தினர்கள் யாரும் வரவில்லை . இவர்கள் பேசினால் தனுஷை புகழ்கிறார்கள். தனுஷ் பேசினால் அவர்களை புகழ்கிறார். 



                                                        அட படத்தை பற்றியோ இசையமைப்பை பற்றியோ சொல்லுங்கடான்னா எவனும் அதப்பத்தி பேச மாட்டேங்கிறானுங்க. 


                                                    தனுஷ் ரொம்ப நல்லவரு, வல்லவரு, நாலுந் தெரிஞ்சவரு, அப்படி இப்படீன்னு கிழி கிழின்னு கிழிக்கிறானுங்க நம்ம காத!


                                                     ஒரு 150 காலேஜ் பசங்களை கூட்டியாந்து பின்னாடி உட்கார வச்சு கத்த விடுரானுங்க கேட்டா ரசிகர்னு சொல்லுரானுங்க. கடைசி வரைக்கும் போட்ட பிரியாணிக்கும், கொடுத்த காசுக்கும் விசுவாசமா நடந்துக்கிட்டானுங்க அந்த பசங்க.



                                                   அப்புறம்  ஏண்டா  அதப்பாத்த சேனலை மாத்த வேண்டியதானே இல்லை டிவிய ஆப் பண்ண வேண்டியதானடா அப்படீன்னு ஒரு கேள்விய நீங்க என்னைப் பார்த்து கேட்கலாம். அதுக்கு காரணம் ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி தான் அது மட்டுமில்ல  மேடையில படத்தோட பாடல்களுக்கெல்லாம் டான்ஸ் ஆடின பொண்ணுங்க எல்லாம் ரொம்ப கிளாமரா ஆடினாங்க. ( ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு).


                                                    தனுஷோட மாமியாரா நடிச்சு இருக்கிறது நம்ம "மனிஷா கொய்ராலா" தான். டிரெய்லர்லேயே பார்க்க சகிக்கல. சரியா தூசி தட்டாம விட்டுட்டானுங்க போல. படம் எப்படியும் ஹிட்டாயிடும் இல்லைன்னா ஹிட் ஆக்கப்படும். தேர்தல்ல ஓட்டப் போட்டுட்டு ரிலாக்ஸா உட்காட்ந்து பார்கலாம்.


இயக்கம் : சுராஜ் (தலைநகரம், மருதமலை, படிக்காதவன்)


இசை : மணி சர்மா


Mar 28, 2011 | 26 comments | Labels: , , ,

                                       கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் "வெள்ளாவி" அழகி தாப்ஸி தான். ஆனால் இப்போது தாப்ஸி காய்ச்சல் ஓய்ந்து விட்டது.

Mar 27, 2011 | 19 comments | Labels: , ,

கலைஞர் பெற்றது "கனிமொழி"
கலைஞர் வளர்த்தது "தமிழ்மொழி"

அம்மா வந்தா நிக்கனும் குனிஞ்சு
இல்லாட்டி போயிடுவ அழிஞ்சு


ராசா தின்னுறாரு "களி"
அதுக்கு காரணம் "மொழி"

அய்யா நிக்கிறது திருவாரூரு
மெய்யா ஜெயிச்சு வருவர் பாரு!


ஶ்ரீரங்கத்துல நிக்கிறாங்க அம்மா
எதுத்து நிக்கிறவனெல்லாம் சும்மா


மூணு மணிக்கு போடுவாங்க டாப்டென்
முப்பதுலயாச்சும் ஜெயிப்பாரா கேப்டன்

ஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி


ஊறுகாய் :

நடிகை மோனிகா வெப்சைட் மற்றும் ப்ளாக் தொடங்கி இருப்பதாகவும் முகவரி தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும் என சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த  தகவலை தந்த நண்பர் RaveePandian அவர்களுக்கு நன்றி.

மோனிகாவின்

வெப்சைட் முகவரி :  http://www.actressmonika.com/

ப்ளாக் முகவரி : http://actressmonika.blogspot.com/ 






                                       தி.மு.க. வின் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்திருந்த போஸ் என்பவர் நேர்கணல் அறைக்குள் வந்தவுடன் கலைஞர் அவரைப் பார்த்து உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் உட்காராமல் பாதி குனிந்த நிலையில் நின்று கொண்டு பவ்யம் காட்டியுள்ளார். அப்போது அவர் தலைவரே! நான் 35 வருஷம் கட்சியில இருக்கேன், 22 முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன் எப்படியாவது எனக்கு இந்த முறை சீட் கொடுங்க தலைவரே! என்று கூறி அழுதே விட்டாரம்.

Mar 22, 2011 | 27 comments | Labels: , ,


                    விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் "சட்டப்படி குற்றம்" . இந்தப்படம் நிச்சயம் அரசியல் வட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சயை கிளப்பும்.


               இந்தப்படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை காட்டப்படுகிறது. இந்தக் காட்சியில் வருபவர் ஆ.ராசாவின் முகச்சாயலில் இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞராக சீமான் நடிக்கிறார். ஆனால் ஊழல் தொகை எவ்வளவு தெரியுமா? 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி.



                                   சத்யராஜ் இந்தப்படத்தில் புரட்சியாளர் சேகுவேரா வேடத்தில் நடித்து இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பல வசனங்கள்  இடம்பெற்றுள்ளது.


                                    எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மகன்கள் செய்யும் அட்டகாசங்களும் காட்டப்படுகிறது.


                                நிறைய காட்சிகள் தற்கால அரசியலையும், குறிப்பாக ஆளுங்கட்சியினையும் தாக்கும் வகையில் உள்ளது.

                                 இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் தான் நடந்தது. அதில் இயக்குனர்கள் சங்கர், செல்வமணி, சீமான் மற்றும் நடிகர்ள் சத்தியராஜ், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                சுவாமிஜி நித்தியானந்தரின் திருவிளையாடலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. நிந்தியானந்தா வேடத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் பல சர்ச்சைகளை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
Mar 21, 2011 | 19 comments | Labels: ,