twitter


                                       சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் "தென்றல்". இதில் கதாநாயகனின் அம்மாவாக வரும் பெண்ணின் செயல்பாடுகள் மிகவும் கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலை பற்றி தெரியாதவர்களுக்காக 

ஒரு சின்ன கதை சுருக்கம்.

இந்த கதையில் வரும் நாயகனுக்கு அவரது அம்மா ஒரு பணக்கார வீட்டில் பெண் பார்க்கிறார். தனது மகளுக்கும் அதே வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்.அதாவது பெண் கொடுத்து பெண் எடுக்கிறாள். இருவருக்கும் ஒரே தேதியில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.( கதாநாயகனின் குடும்பம் நடுத்தர வர்க்கம்)

ஆனால் "தமிழ்" என்ற கதாநாயகன் கதாநாயகிய வரும் "துளசி" என்ற ஏழை வீட்டு பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் அவசர திருமணம் செய்து கொள்கிறான். இதனால் கதாநாயகனின் தங்கை கல்யாணமும் நின்று விடுகிறது. கதாநாயகனும் கதாநாயகியும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.கதாநாயகனுக்கு நிச்சயக்கப்பட்ட "சாரு" என்ற பெண்ணால் இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை.  எப்படியாவது காதாநாயகனை அடைய துடிக்கிறாள். இதற்காக கதாநாயகனின் அம்மாவிடம் சென்று அவர்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்கிறாள். 

இதற்கான காரணம் தனது மகனை அடைய துடிப்பது தான்  என தெரிய வரும் போது அந்த அம்மா "சாரு" என்ற பெண்ணுக்கு தனது மருமகளை மகனிடமிருந்து பிரித்து தனது மகனை உன்னிடம் சேர்ப்பதாக உறுதியளிக்கிறார். ஏனென்றால் இவள் பணக்கார பெண் இவளால் தனக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது என்பதற்காக. இதற்காக "ஷாரு" என்ற அந்த பெண்ணும் அந்த கதாநாயகனின் அம்மாவும் சேர்ந்து தீட்டும் திட்டங்களும் பேசும் வசனங்களும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இப்படியும் ஒரு கேவலமான அம்மா எவளாவது இருப்பளா?. தனது மகனுக்கே "மாமா" வேலை பார்ப்பது போல் அந்த அம்மாவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. உயிர் படத்தில் சங்கீதா தனது கணவனின் தம்பி மேல் ஆசைப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டதற்கே எதிர்ப்பு தெரிவித்த இந்த சமூகம் பல பெண்களால் விரும்பி பார்க்கப்படும் டி.வி. சீரியலில் அம்மா போன்ற புனிதமான உறவுகளை இப்படி கேவலமாக சித்தரிப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு கதை எழுதுவது யார் தெரியுமா விகடன் கதைக்குழுவாம்.


Mar 1, 2011 | 21 comments | Labels:

21 comments:

 1. # கவிதை வீதி # சௌந்தர்
  Mar 1, 2011, 8:27:00 PM

  படிச்சிட்டு வர்றேன்..

 1. # கவிதை வீதி # சௌந்தர்
  Mar 1, 2011, 8:29:00 PM

  அதனால் தான் நாடங்கள் பெலும்பாலும் பார்ப்பதில்லை..
  இதனால் உடல் மனம் சி ந்தனை கெட்டதுதான் பாக்கி..

  கோடி வீடுகளில் அரங்கோரும் இது போன்ற தொடர்கள் நாகரீமாக இருக்கவேண்டும்..

  எல்லாம் காசுக்காக என்ன செய்ய..

 1. தமிழ் 007
  Mar 1, 2011, 8:58:00 PM

  வாங்க #கவிதைவீதி# சௌந்தர் நண்பரே!

  மிக நன்றி

  உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும், வாக்குக்கும்.

 1. Speed Master
  Mar 2, 2011, 6:20:00 PM

  நீங்கள் சொல்வது சரிதான்

  கடத்தல்
  கொலை
  கற்பழிப்பு
  பழிவாங்குதல்
  மாற்றன் கணவனை அபகரித்தல் போன்ற காட்சிகள் சீரியல்களில் அதிகம் வருகின்றன்

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 2, 2011, 6:27:00 PM

  இந்தமாதிரி நாடகங்கள் பார்த்ததான் சமுதாயம் கெட்டுபோகுது நன்பரே... பயனுள்ள பதிவு....

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 6:42:00 PM

  Speed Master நண்பரே கருத்துக்கு மிக நன்றி.

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 6:43:00 PM

  வாங்க வேடந்தாங்கல்-கருன் நண்பரே!

  கருத்துக்கு மிக நன்றி.

 1. சி.கருணாகரசு
  Mar 2, 2011, 6:45:00 PM

  இதை எடுப்பவனும் திருந்த மாட்டான்.....
  இதை பார்ப்பவர்களும் திருந்த போறதில்ல....

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 6:50:00 PM

  //சி.கருணாகரசு said...

  இதை எடுப்பவனும் திருந்த மாட்டான்.....
  இதை பார்ப்பவர்களும் திருந்த போறதில்ல....//

  கருத்துக்கு மிக நன்றி நண்பரே!

 1. Jaleela Kamal
  Mar 2, 2011, 7:17:00 PM

  என்ன செய்ய பார்க்கவே எரிச்சலா வருது

 1. Anonymous
  Mar 2, 2011, 7:41:00 PM

  எல்லாம் கேவலமான TRP ரேடிங்குக்கு இப்படி கீழ்தரமா சீரியல்ஸ் எடுக்கறாங்க ..நான் இந்த கருமத்தையெல்லாம் பாக்கறது இல்லை .
  ஒரு உறுப்படியான சீரியல் சொல்லுங்க பார்ப்போம்

 1. Jayadev Das
  Mar 2, 2011, 8:03:00 PM

  இந்த மாதிரி எழுதினால் நீ என்ன கலாசார காவலனா என்பார்கள், ரெண்டாயிரம் அம்மாகளில் இப்படி ஒரு அம்மா இருக்கலாம் அதைத்தான் காட்டினார்கள் என்பார்கள். அப்புறம் ஜோதி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்து யாராவது பெண்ணை பலாத்காரம் செய்தாயா என்பார்கள். இன்டர்நெட்டில் நீலப்படம் பார்க்காதவனா நீ என்பார்கள். இதில்லெல்லாம் கெட்டுப் போகாத நீ இந்த சீரியலால் கேட்டுவிட்டாயா என்பார்கள். இத்தனைக்கும் இந்த சீரியல் எடுத்தவனுக்கும் இவனுக்கும் சம்பந்தமே இருக்காது, இருந்தாலும் இந்த மாதிரி பிக்காலித் தனமாக ஊரைக் கெடுக்கும் திரைப் படத்துக்கும் சீரியலுக்கும் ஆதரவாக பதிவு போட்டுக் கொண்டிருப்பான், தனால் ஆதாயம் என்ன வருமோ தெரியவில்லை.

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 10:43:00 PM

  //Jaleela Kamal said...

  என்ன செய்ய பார்க்கவே எரிச்சலா வருது//

  உங்கள் கருத்தை இங்கு பதிவு செய்ததற்கு மிக நன்றி.

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 10:53:00 PM

  //Anonymous Anonymous said...

  எல்லாம் கேவலமான TRP ரேடிங்குக்கு இப்படி கீழ்தரமா சீரியல்ஸ் எடுக்கறாங்க ..நான் இந்த கருமத்தையெல்லாம் பாக்கறது இல்லை .
  ஒரு உறுப்படியான சீரியல் சொல்லுங்க பார்ப்போம்//

  அப்படி ஒரு உறுப்படியான சீரியல் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.
  ஒவ்வொரு சீரியலின் கருவும் ஏதாவது ஒரு கலாச்சார சீரழிவைத்தான் மையமாக கொண்டுள்ளது.

  உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

 1. Anonymous
  Mar 2, 2011, 11:00:00 PM

  சன்டிவி சீரியல்களைப் பற்றி தைரியமாக எழுதிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். சீரியல்கள் என்றப் பேரில் இவர்கள் செய்யும் மனவியல்/உளவியல் சீர்கேடுகளை கண்டிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். குறிப்பாக சீரியல்களை கொலை செய்தல், கற்பழிப்பு, கடத்தல், கள்ளக் காதல், பழிவாங்கல் இதனை விட்டால் ஒன்றுமே எடுக்கத் தெரியாத பொன்னை டைரக்டர்களுக்கு.... எல்லா நாடகங்களும் அப்படித் தான் இருக்கிறது. வீட்டின் வரவேற்பு அறைக்கே வரும் இந்த நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய ஒரு குழு அவசியம் எனப்படுகிறது. இதனைக் கண்டிக்காது மாதர் சங்கங்களும், சிறுவர் அமைப்புகளும் என்னத்தைப் புடிங்கிக் கொண்டு இருக்கின்றனவே ...........

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 11:06:00 PM

  //Jayadev Das Mar 2, 2011 8:03:00 PM

  இந்த மாதிரி எழுதினால் நீ என்ன கலாசார காவலனா என்பார்கள், ரெண்டாயிரம் அம்மாகளில் இப்படி ஒரு அம்மா இருக்கலாம் அதைத்தான் காட்டினார்கள் என்பார்கள். அப்புறம் ஜோதி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்து யாராவது பெண்ணை பலாத்காரம் செய்தாயா என்பார்கள்.....//

  நண்பரே உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக நன்றி.

  கில்லி படத்தில் அந்த மிளாகாய் பொடி டெக்னிக்கை பார்த்துவிட்டு அதன்பின்னர் எவ்வளவோ கெட்ட விஷயங்களுக்கா அதை பயன்படுத்தியதை செய்தி தாள்களிலும் தொலைக்காட்சிகளும் பார்த்தோம்.

  நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் தான் மனிதனின் மனதில் உடனே பதியும் இது தான் உளவியல் பூர்வமான உண்மை.

  இதை மனதில் கொண்டு மக்கள் தொடர்பு சாதனங்களான சினிமா, தொலைக்காட்சி, செய்திதாள்கள் செயல்பட வேண்டும்.

 1. தமிழ் 007
  Mar 2, 2011, 11:24:00 PM

  //இக்பால் செல்வன் said...

  சன்டிவி சீரியல்களைப் பற்றி தைரியமாக எழுதிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். சீரியல்கள் என்றப் பேரில் இவர்கள் செய்யும் மனவியல்/உளவியல் சீர்கேடுகளை கண்டிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.....//

  நண்பரே முதலில் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நீங்கள் சொல்வது போல் நிச்சயம் இதற்கு தணிக்கை குழு அவசியமே. தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை விட வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.

  சில நாட்கள் ஓடும் படத்திற்கே தணிக்கை குழு இருக்கும் போது வருடக்கணக்கில் ஓடும் சீரியலுக்கு தணிக்கை மிக அவசியம்.

 1. bandhu
  Mar 2, 2011, 11:43:00 PM

  இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். எங்கள் வீட்டில் தமிழ் டிவி சேனல் எதுவும் இல்லை!

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 12:16:00 AM

  //bandhu said...

  இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். எங்கள் வீட்டில் தமிழ் டிவி சேனல் எதுவும் இல்லை!//

  தங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக நன்றி.

  தமிழ் சேனல் இல்லையென்றால் வேறு எந்த மொழி சேனல் பார்ப்பீர்கள்?

 1. விஜய்
  Mar 4, 2011, 3:18:00 PM

  ராதிகாவின் சீரியல்கள் எல்லாமே "மூன்றாவது புருஷனோட நாலாவது கணவன்" என்ற ரேஞ்சுக்குத்தான் இருக்கும். எல்லா சீரியல்களிலுமே ஒரு சிலர் சதி வேலை பண்ணுவதையே முழுநேரத்தொழிலாகக் கொண்டிருப்பர். நல்லவர்கள் எப்போதுமே அழுது கொண்டிருப்பார். பாவம் நமது தமிழ்ப்பெண்கள்.

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 5:30:00 PM

  //விஜய் said...

  ராதிகாவின் சீரியல்கள் எல்லாமே "மூன்றாவது புருஷனோட நாலாவது கணவன்" என்ற ரேஞ்சுக்குத்தான் இருக்கும். எல்லா சீரியல்களிலுமே ஒரு சிலர் சதி வேலை பண்ணுவதையே முழுநேரத்தொழிலாகக் கொண்டிருப்பர். நல்லவர்கள் எப்போதுமே அழுது கொண்டிருப்பார். பாவம் நமது தமிழ்ப்பெண்கள்.//

  ராதிகாவுக்கு அதான் சென்டிமென்ட்டாம் நண்பரே!
  அந்த அம்மாவுக்கு வேற கதையே தெரியாதாம். கள்ளப்புருஷன், 6 வது கல்யாணம், கற்பழிப்பு இதான் தெரியும்.

  கருத்துக்கு மிக நன்றி நண்பரே!