twitter



                                       ஒரு நாள் உடம்பு சரியில்லையின்னு டாக்டர்கிட்ட போனேன். டாக்டர் செக் பண்ணிவிட்டு தன்னுடைய நர்ஸை அழைத்து ஏதோ மருந்து பேர சொல்லி அத இவருக்கு போடு, அப்புறம் மஞ்சள் மாத்திரை, சிவப்பு மாத்திரை, சின்ன வெள்ளை மாத்திரை எல்லாத்தையும் ரெண்டு நாளைக்கு கொடு என்றார்.




                                                அந்த பொண்ணைப் பார்த்தா நர்ஸ் மாதிரியே தெரியலை யூனிபார்ம் இல்லை அதுவும் இல்லாம ரொம்ப படிச்ச பொண்ணு மாதிரியும் தெரியல. அந்த பொண்ணுகிட்ட கேட்டே இதையெல்லாம் கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்.


அந்த பொண்ணு ஊசி போட்ட இடத்துல ஒரு வாரம் வலி போகவே இல்லை.   அந்த பொண்ணுக்கு அதற்கான சரியான வழிமுறைகள் தெரியவில்லை அது தான் காரணம். 

 இதை ஏன் இப்போ சொல்றேன்னா?


அரசு மருத்துவமனையில வேலை பார்க்கிற டாக்டர்கள் பல பேர் தனியா கிளினிக் வச்சு நடத்துறாங்க. காலை, மாலை இரண்டு வேலையும் வந்து  பார்த்துக்கிறாங்க. இந்த மாதிரி டாக்டருங்க  நிறைய பேரு தன்னோட கிளினிக்குக்கு அரசு மருத்துவ மனையிலேயே மருந்தை எடுத்து கொண்டு வந்துடுறாங்க. 

அந்த மாதிரி கிளினிக்ல நர்ஸ்க்கு படித்த பொண்ணுங்களை வேலைக்கு வைப்பது இல்லை. ஏதோ பத்தாவது, பனிரெண்டாவது படிச்சிட்டு வீட்ல சும்மா இருக்கிற பொண்ணுங்களை குறைந்த சம்பளத்துல வேலைக்கு வச்சுக்கிறாங்க. 

இதுக்கு முக்கிய காரணம் நர்ஸ்க்கு படிச்ச பொண்ணு கிளினிக்க கூட்டி பெருக்குகிற வேலையெல்லாம் செய்யாது. இந்த மாதிரி பொண்ணுங்க என்றால் எல்லா வேலையும் பார்க்கும்.

அந்த பொண்ணுங்களுக்கு மாத்திரை பேரெல்லாம் தெரியாது எல்லாம் 'கலர்'   'சைஸ்' கணக்குத்தான். ஆனால் கொஞ்சம் பழகிய பிறது நன்றாக தெரிந்து கொள்கின்றனர்.



இந்த மாதிரி விஷயமெல்லாம் ஏதாவது உயிரிழப்பு நடந்த பின்பு தான் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படும் போல.

டாக்டருக்கு அடுத்த படியாக உள்ள நர்ஸ்கள்  விஷயத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது சரிதானா?

இதுக்கு என்னங்க பண்றது? 


நீங்க தான் ஒரு நல்ல முடிவு சொல்லனும்.



Mar 7, 2011 | 13 comments | Labels: ,

13 comments:

  1. ப.கந்தசாமி
    Mar 7, 2011, 7:53:00 PM
    This comment has been removed by a blog administrator.
  1. தமிழ் 007
    Mar 7, 2011, 8:08:00 PM
    This comment has been removed by the author.
  1. எல் கே
    Mar 7, 2011, 8:38:00 PM
    This comment has been removed by a blog administrator.
  1. எல் கே
    Mar 8, 2011, 6:37:00 AM

    நன்றி நண்பரே. யாரை இந்த வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது ஆனால் யார் சட்டத்தை மதிக்கிறார்கள்

  1. தமிழ் 007
    Mar 8, 2011, 9:27:00 AM

    //எல் கே said...

    நன்றி நண்பரே. யாரை இந்த வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது ஆனால் யார் சட்டத்தை மதிக்கிறார்கள்//

    நண்ரே! கருத்துக்கு மிக நன்றி.
    குறைகளை எடுத்து காட்டியமைக்கு எனது நன்றிகள். உங்களை போன்றவர்களின் ஆதரவை என்றும் விரும்புகிறேன்.

  1. டக்கால்டி
    Mar 8, 2011, 11:54:00 AM

    விழிப்புணர்வை தர நினைத்து விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
    நானும் இதை கவனித்து இருக்கிறேன்...ஆனால் நர்சாக வரும் பெண்கள் அழகாக இருப்பதால் ஜொள்ளி விடுகிறேன்..ஹி ஹி

  1. Unknown
    Mar 8, 2011, 1:02:00 PM

    எனக்கும் இது போல் அனுபவம் உண்டு ,முக்கியமாக சம்பளம்தான் இதற்க்கு காரணம் , இதே போன்ற நானும் எழுதி உள்ளேன் ,பகிர்வுக்கு நன்றி

  1. ரஹீம் கஸ்ஸாலி
    Mar 8, 2011, 1:08:00 PM

    பெரும்பாலான மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் இது நடப்பதுதான்

  1. தமிழ் 007
    Mar 8, 2011, 4:14:00 PM

    //டக்கால்டி said...

    விழிப்புணர்வை தர நினைத்து விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
    நானும் இதை கவனித்து இருக்கிறேன்...ஆனால் நர்சாக வரும் பெண்கள் அழகாக இருப்பதால் ஜொள்ளி விடுகிறேன்..ஹி ஹி//

    வாங்க நண்பரே!

    உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

  1. தமிழ் 007
    Mar 8, 2011, 4:15:00 PM

    //நா.மணிவண்ணன் said...

    எனக்கும் இது போல் அனுபவம் உண்டு ,முக்கியமாக சம்பளம்தான் இதற்க்கு காரணம் , இதே போன்ற நானும் எழுதி உள்ளேன் ,பகிர்வுக்கு நன்றி//

    வாங்க நண்பரே!

    கருத்துக்கு மிக நன்றி நண்பரே!

    எனது தளத்தில் இணைந்தமைக்கும் எனது நன்றிகள்.

  1. தமிழ் 007
    Mar 8, 2011, 4:16:00 PM

    //ரஹீம் கஸாலி said...

    பெரும்பாலான மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் இது நடப்பதுதான்//

    கருத்துக்கு நன்றி நண்பரே!

  1. Anonymous
    Mar 9, 2011, 11:36:00 AM

    படிக்காமல் அனுபவத்தின் அடிப்படையில் டாக்டராக பணிபுரிகிறார்கள். வருத்தம் தரும் செய்தி தான்.

  1. குறையொன்றுமில்லை.
    Mar 9, 2011, 8:07:00 PM

    ஒவ்வொரு இடங்களில் கம்பௌண்டரா
    இருந்தவங்களே டாக்டராகவும் அவதாரம்
    எடுத்திருப்பாங்க. பாவம் நோயாளிங்க
    தான்.