twitter


பால்! பாழ்!




வாழ்க்கையை
பாலாக்கி பருகுவதும்
பாழாக்கி மருகுவதும்
நம் கையில்...







மண்ணுக்குள்! மனதுக்குள்!



மண்ணுக்குள் விதை விதைத்தேன்
மனதுக்குள் அவளை விதைத்தேன்
மண்ணுக்குள் விதைத்தது செடியானது
மனதுக்குள் விதைத்தது கொடியானது
மண்ணுக்குள் விதைத்தது பூ எய்தியது
மனதுக்குள் விதைத்தது பூப் பெய்தியது
மண்ணுக்குள் விதைத்தது கனி தந்தது
மனதுக்குள் விதைத்தது கனிவு தந்தது
மண்ணுக்குள் விதைத்ததற்கு வசந்த காலம்(வந்தது)
மனதுக்குள் விதைத்ததற்கு வசதியான மாப்பிள்ளை(வந்தான்)
மண்ணுக்குள் விதைத்தது தந்த கனி பழமானது
மனதுக்குள் விதைத்தது தந்த கனிவு வெறுப்பானது
மண்ணுக்குள் விதைத்தது நிழல் தந்தது
மனதுக்குள் விதைத்தது வலி தந்தது
எனக்குக் கோபம் வந்தது
இறுதியில்
மனதிற்குள் விதைத்ததை வெட்டி(அவளை)
மண்ணிற்குள் புதைத்து விடலாம் என்று...



எது வலியது?

இருவீட்டாரும் இனி
நம்மை பிரிக்க முடியாது
என்று எண்ணித்தான்
மாய்ந்தனர் காதலர்கள்
அப்படியும் பிரித்தார்கள்
அவனை எரித்தும்
அவளை புதைத்தும்
வலியது விதியல்ல
ஜாதி!


வரவு - செலவு


நொடிகள்
நிமிடங்கள்
மணிகள்
நாட்கள்
வாரங்கள்
மாதங்கள்
ஆண்டுகள்
இவற்றின்
செலவு தான்
மரணத்தின்
வரவு!

சரித்திரம்




சாகத் துணிந்து விட்டாயா?
தகுதி வந்து விட்டது உனக்கு
சரித்திரம் படைக்க!








நன்றி! நன்றி! நன்றி!

இந்த தளத்தில் இணைந்த நண்பர்களுக்கும், தங்கள் கருத்தை பதிவு செய்த அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
Feb 16, 2011 | 6 comments | Labels:

6 comments:

  1. சக்தி கல்வி மையம்
    Feb 16, 2011, 12:46:00 PM
    This comment has been removed by the author.
  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 16, 2011, 1:10:00 PM

    ada.. அட. ஒரே போஸ்ட்ல இத்த்னையா/

  1. தமிழ்த்தோட்டம்
    Feb 16, 2011, 2:40:00 PM

    எல்லாமே அருமையா இருக்கு

  1. தமிழ் 007
    Feb 17, 2011, 12:09:00 AM

    sakthistudycentre-கருன் நண்பரே!
    உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி!

  1. தமிழ் 007
    Feb 17, 2011, 12:14:00 AM

    அட்ரா சக்க! சி.பி.செந்தில்குமார் நண்பரே! உங்கள் கருத்துக்கு நன்றி!
    உங்கள் பதிவுக்கு நீங்கள் எழுதும் டிஸ்கி எனக்குப் பிடிக்கும்.

  1. தமிழ் 007
    Feb 17, 2011, 12:17:00 AM

    தமிழ்த்தோட்டம் நண்பரே!
    உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.