twitter




என்ன கொடுமை சார் இது?


நிலவை நேசித்தேன்
தேய்ந்து போனது
மலரை நேசித்தேன்
வாடிப் போனது
கார்மேகத்தை நேசித்தேன்
மழையாகி போனது
பறவையை நேசித்தேன்

பறந்து போனது
குளத்தை நேசித்தேன்
வற்றிப் போனது
ஆற்றை நேசித்தேன்
வறண்டு போனது
இறுதியில் அவளை நேசித்தேன்
அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?
ஓடிப் போனாள்
அடுத்தவனுடன்.
"என்ன கொடுமை சார் இது?"




புத்தகங்கள்



அறியாமையை இல்லாமையாக்கும்
அகல் விளக்குகள்
கண்களைத் திறக்கும்
காகிதச் சாவிகள்
உள்ளத்தை உழுது
உண்மையை விதைக்கும்
உழவர்கள்.




மின்சாரக் காதல்


நீ இல்லாத போது
தவிக்கின்றேன்
வியர்க்கின்றேன்
வெறுக்கின்றேன்
ஓய்கின்றேன்
நீ வரும் வரை
எனக்கு நிம்மதியில்லை
நீ இருந்தால் தான்
நான் மட்டுமல்ல
உலகமும் இயல்பாய்
இயங்கும்...


தத்துவம் :

சம்சாரம் இல்லாம கூட பெட்ல படுத்திடலாம், ஆனா
இந்த மின்சாரம் இல்லாம முடியாதுடா சாமி!!


Feb 19, 2011 | 10 comments | Labels:

10 comments:

  1. சுதர்ஷன்
    Feb 19, 2011, 7:40:00 PM

    //கண்களைத் திறக்கும்
    காகிதச் சாவிகள்
    உள்ளத்தை உழுது
    உண்மையை விதைக்கும்
    உழவர்கள்.//

    அழகான கோர்வை வாழ்த்துக்கள் :)

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 19, 2011, 7:52:00 PM

    மூன்று கவிதைகளும் அருமை..

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 19, 2011, 7:53:00 PM

    வாழ்த்துகளும்..
    பின்பு வாக்குகளும்..

  1. தமிழ் 007
    Feb 19, 2011, 7:55:00 PM

    S.Sudharshan நண்பரே!
    உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக நன்றி

  1. தமிழ் 007
    Feb 19, 2011, 10:36:00 PM

    #கவிதை வீதி#சௌந்தர் நண்பரே!

    மிக நன்றி!

    உங்கள் கனிவான கருத்துக்கும், மதிப்புமிக்க வாக்குக்கும்.

  1. சக்தி கல்வி மையம்
    Feb 20, 2011, 6:02:00 PM

    Nice., super., attakasam., arumai..bagavundhi., bohuth accha..

  1. தமிழ் 007
    Feb 20, 2011, 7:52:00 PM

    வாங்க வேடந்தாங்கள்-கருன் நண்பரே!
    உங்கள் கருத்துக்கு நன்றி!

    பேரை மாத்தீட்டீங்களே(sakthistudycenter).

  1. FARHAN
    Feb 21, 2011, 11:46:00 AM

    அருமையான கவி வரிகள் முதல் கவிதை அனுபவமோ?/

  1. தமிழ் 007
    Feb 21, 2011, 7:09:00 PM

    வாங்க FARHAN நண்பரே!

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    முதல் கவிதை என்னோட அனுபவம் தாங்க.(எப்படி கண்டுபிடுச்சீங்க?)

  1. Unknown
    Feb 24, 2011, 6:44:00 PM

    தத்துவம் செம காட்டு மச்சி!