twitter



                                                சூடாய் ஒரு கப் காபி! நம்மில் பலருக்கு காலையில் இதை குடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும். பலர் " காபி ரெடி " என்ற குரல் கேட்ட பின் தான் படுக்கையிலிருந்தே எழுவர். நம் எல்லோரையும் இப்படி அடிமைப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காபியின் 'கமகமக்கும்' தகவல்களை தெரிந்து கொள்ளப் போகிறோம்.


                                                      காபியை நமக்குக் காட்டிக் கொடுத்தவையே ஆடுகள் தான். முன்பொரு காலத்தில் எத்தியோப்பியாவில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென்று உடலை உதறிக்கொண்டு 'தைய தக்க' என்று குதிக்க ஆரம்பித்து விட்டன . இதைப்பார்த்த ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகள் மேய்ந்த அந்த செடியை ஆராய்ந்து பார்த்தனர். இப்படித்தான் நமக்கு காபி என்ற 'தேவபானம்' கிடைத்தது. 

                                         நியாயமாக, காபி மரத்தில் காய்க்க வேண்டியது. காபிச்செடிகள், 30 அடிவரை வளரக்கூடிய மகாவல்லமை பொருந்தியவை. மனிதர்கள்தான், காபி கொட்டையைக் பறிக்க வசதியாக அவற்றை 10 அடிக்கு மேல் வளர விடுவதில்லை. உண்மையில் காபி கசப்பு சுவை கொண்டது. நாம் தான் சர்க்கரை போட்டு சமாளித்துக் கொள்கிறோம்.

                             'இன்ஸ்டன்ட் காபி' யைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? ஜார்ஜ் வாஷிங்டன். பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்.

காபியை எப்படி குடிப்பது :

                                 காரமானவற்றை சாப்பிட்டுக்கொண்டே காபி சாப்பிடும்போது சாதாரண காபி கூட சூப்பராக இருக்கும். ஏன் தெரியுமா? காரம், உங்கள் நாவின் சுவை மொட்டுகளை தூண்டுவிடும் அதன்பிறகு சாப்பிடும் காபி இன்னும் சுகமான சுவையாக இருக்கும்.

                                                         படித்தவுடன் ஒரு கப் காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? இதோ கீழே உங்களுக்காக ஒரு கப் ஸ்பெஷல் காபி சூடாக காத்துக் கொண்டிருக்கிறது சீக்கிரம் குடித்து விடுங்கள் இல்லைனா ஆறிடும்!!!.
Feb 14, 2011 | 3 comments | Labels:

3 comments:

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 14, 2011, 8:20:00 PM

    பகிர்வுக்கு நன்றி..

  1. சகாதேவன்
    Feb 14, 2011, 9:17:00 PM

    பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
    சகாதேவன்

  1. தமிழ் 007
    Feb 14, 2011, 11:04:00 PM

    தங்கள் கருத்துகளை பதிவு செய்த #கவிதை வீதி#சொளந்தர் மற்றும் சகாதேவன் ஆகிய இரு நண்பர்களுக்கும் நன்றி.