twitter

                                       1848 - ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தங்கவேட்டை ஏகத்துக்கும் பிஸியாக நடந்து கொண்டிருந்தது. பலர், சுரங்கங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார்.
அவர் கொண்டு சென்ற எல்லா வகை துணிகளும் விற்றுத்தீர்ந்தன ஆனால் கேன்வாஸ் துணி மட்டும் அப்படியே இருந்தது.


                                     சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களே, அவரது வாடிக்கையாளர்கள். சுரங்கத்தில் கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாக அவர்கள் புலம்பினார்கள்.

                                      தனது கேன்வாஸ் துணி விற்கவில்லை. வாடிக்கையாளர்கள் பேண்ட் கிழியக் கூடாது. இரண்மையும் சேர்த்து யோசித்தார். கேன்வாஸ் துணியிலேயே பேண்ட் தைத்தால் என்னவென்று லெவிக்கு ஐடியா தோன்றியது.

                                                 கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்தார். என்றோ அவர் வாங்கி வைத்த பித்தளை நட்டுகள் கண்ணில் பட்டது. அடுத்த ஐடியா கிடைத்தது. சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்கள். கனமான உபகரணங்களை அவர்களுது பேண்ட் பாக்கெட்டுகளில் வைக்க வேண்டியதிருக்கும். அதனால் பைகள் அடிக்கடி கிழிந்து விடும். அதை மனதில் வைத்து, பித்தளை நட்டுகளை பேண்ட் பாக்கெட்டுகளின் ஓரங்களில் வைத்து தைத்தார்.

                                                    அந்த புதிய ரக கேன்வாஸ் பேண்ட்கள், சுரங்க தொழிலாளிகளை மிகவும் கவர்ந்தன. சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் அவரது வாடிக்கையாளர்களாக மாறினர்.

                                                  அதன்பின் இத்தாலியிலிருந்து ஜென்னொஸ் என்ற நீல வண்ண துணியினை வாங்கி பேண்ட் தைத்தார். நாளடைவில் 'ஜீன்ஸ்' என்ற பெயர் அதற்கு உருவானது.

                                              சுரங்கத் தொழிலாளர்களுக்காக லெவிஸ் என்பவர் தைத்த ஜீன்ஸ் நாளடைவில் ஒவ்வொரு நாடுகளாகச் சென்று மனிதர்களின் இடுப்பை ஆக்கிரமித்தது.

                                             இன்று அது பல நாடுகளின் தேசிய உடையைப் போல் ஆகிவிட்டது. இவ்வளவு ஏன் இளமையின் அடையாளமும் அது தான். சினிமா படங்களில் ஹீரோ இளமையாக தெரிய வேண்டுமானால் தலைக்கு 'டை' மட்டும் போதாது ஜீன்ஸ்-ம் வேண்டும்.



"அடப்பாவிகளா! எதுக்னு தயாரிச்சதை எதுக்கு போட்டுகிட்டு திரியுரானுங்க பாரு!"
Feb 23, 2011 | 12 comments | Labels:

12 comments:

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 23, 2011, 7:36:00 PM

    ஆச்சரிய தகவல் தான்...
    வாழ்த்துக்கள்..

    இதை பயன் படுத்துவதற்கு இன்னோரு காரணம் துவைக்க தேவையில்லை...

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 23, 2011, 7:36:00 PM

    ஐ.. நான் தான் முத்லா..

    அப்ப ஓட்டு உண்டு..

  1. தமிழ் 007
    Feb 23, 2011, 9:43:00 PM

    நன்றி கவிதை வீதி சௌந்தர் நண்பரே!

    உங்கள் கருத்துக்கும் ஓட்டுக்கும்.

  1. Unknown
    Feb 23, 2011, 10:25:00 PM

    ஜீன்ஸ்க்குள்ள இவ்வளவு மேட்டரா.

  1. தமிழ் 007
    Feb 23, 2011, 11:06:00 PM

    கே.ஆர்.விஜயன் நண்பரே!

    மிக நன்றி!

    உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கும், எனது தளத்தில் இணைந்ததற்கும்.

  1. calmmen
    Feb 24, 2011, 1:06:00 PM

    interesting blog
    thanks

    http://karurkirukkan.blogspot.com/#ixzz1ErLrm7Fb

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 24, 2011, 2:04:00 PM

    ஜீன்ஸ் இளைஞர்களின் ஆதர்சன டிரஸ்

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 24, 2011, 2:04:00 PM

    ஜீன்ஸ் இளைஞர்களின் ஆதர்சன டிரஸ்

  1. தமிழ் 007
    Feb 24, 2011, 2:23:00 PM

    வாங்க சி.பி.செந்தில்குமார் நண்பரே!

    நீங்க எப்பவும் ஜீன்ஸ் தானா?

  1. சக்தி கல்வி மையம்
    Feb 24, 2011, 2:29:00 PM

    present.,

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 25, 2011, 9:07:00 AM

    aamaa ஆமா.. ஏன்னா நான் யூத்

  1. Butter_cutter
    Mar 3, 2011, 2:26:00 PM

    போட்டு பாருதல கழட்டவே மாட்ட