twitter

    இன்று உலகமே கொண்டாடும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான பெயர்கள் எப்படி உருவாகின என்ற சுவாரஸ்யத்தை இப்போது நீங்கள் அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்.......


விண்டோஸ் 7
                                           
                                    விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் என்ற பெயரினையே விட்டு விடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருள்களின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித்தன்மையை காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. 

                               ஆனால் இந்தப்பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; அதனால் இந்தப்பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்தப் பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்கு கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.


பயர்பாக்ஸ்
                                      
                                            எல்லா நிறுவனங்களை போல மொஸில்லாவும் தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் ( Fire Bird )  என்றுதான் இதற்கு பெயர் சூட்டியது. ஆனால் இந்த இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களை கேட்ட போது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.


ஐபாட்
                                
                                         ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் ( Hub ) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு கணினி மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.
Jan 24, 2011 | 0 comments | Labels:

0 comments: