twitter

                        நேர்மறை எண்ணங்கள்!!!

குழந்தை கொசு தன்
முதல் வேட்டையை
முடித்துக்கொண்டு வீடு
திரும்பியது.

தந்தை கொசு : உன் முதல்
வேட்டை அனுபவம் எப்படி
இருந்தது.
குழந்தை கொசு : மிகப் பிரமாதம்
மனிதர்கள் என்னை கைதட்டி
வரவேற்றார்கள்.

விஷயங்களை நேர்மறையாக
எடுத்துக்கொள்ளுங்கள்.
                                                             ***********************



                                                                         வலிமை 


சுமைகளை குறைக்கச் சொல்லி
கடவுளை வேண்டாதீர்கள்.
உங்கள் பலங்களை கூட்டச்
சொல்லி வேண்டுங்கள்.
                                                              *********************

உங்கள் வெற்றிக்கு துணையான
குழுவை உருவாக்கும்போது...
ஜெயிக்க விரும்பும் மனிதர்களை தேடுங்கள்.
அது கடினமாக இருப்பின்
தோல்வியை வெறுக்கும் மனிதர்களை தேடுங்கள்.
                                       ************

நாம் பிறருடைய இன்பத்தை
எழுதும் எழுது கோலாக இருக்கலாம்.
முடியாத பட்சத்தில்
பிறருடைய துன்பத்தை அழிக்கும்
ரப்பராகவாவது இருக்கலாம்.

                                     *******************




கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு
காற்றில் கிளைகள் அசைவதால்
பயம் இல்லை. காரணம் அவைகள்
கிளைகளை நம்புவதில்லை!
தன் சிறகுகளை நம்புகின்றன.



 வரிகள் தொடரும்.......
Jan 12, 2011 | 0 comments | Labels:

0 comments: