twitter



1. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.

                                                           **********************



2. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.

3. அச்சம் எப்போது நெருங்குகிறதோ, அப்போதே அதை எதிர்த்து, அடித்து கொன்று விடுங்கள்.
                        
                                                     *************************
4. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.
                                                **********************************
5. பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
                                                           *********************
6. ஒவ்வொரு வேலையை செய்யத் தொடங்கும் முன் உங்களை மூன்று கேள்விகள் கேளுங்கள். 

இதை ஏன் செய்கிறேன் ?

இந்த செயலின் விளைவுகள் என்ன ?

இதை வெற்றிகரமாக செய்வேனா ?
                                                   *****************************
7. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.
                                    **********************************************
8. அற்பமான உயிரினங்களிடம் கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்.


எப்போதும் சாணக்கியனாக இருங்கள். உலகத்தை வெல்லுங்கள்.
Jan 15, 2011 | 1 comments | Labels: