சிந்தித்து... செயல்படுங்கள்!!!
வாழ்க்கையில் பாதிப் பிரச்சனை
சிந்திக்காமல் செயல்படுவதால்
ஏற்படுகிறது.
மீதிப் பிரச்சனை
செயல்படுத்தாமல் சிந்தித்துக்கொண்டே...
வெற்றிக்குப் பின் ஓய்வு
எடுக்காதீர்கள்!
நீங்கள் பெற்றது
வெற்றி அல்ல.
வெறும் அதிர்ஷ்டம்
என்று சொல்ல பல
உதடுகள் துடித்துக்
கொண்டிருக்கின்றன!!
*************************
ஒரு மரத்தால் ஒரு லட்சம்
தீக்குச்சிகள் தயார் செய்ய முடியும்.
ஒரே தீக்குச்சியால் ஒரு லட்சம்
மரங்களை அழிக்கவும் முடியும்.
ஒரு தீய எண்ணம்
நம்முள் இருக்கும்
அத்தனை நல்ல
எண்ணங்களையும்
எரிக்கக் கூடும்!!
**********************
வாழ்க்கை
ஒரு புல்லாங்குழல்!
துளைகளும்,
வெறுமையும் நிறைந்தது!
நீங்கள் திறமையானவர்களாக
இருந்தால்
பல மாய கானங்களைக்
காற்றில் பறப்ப முடியும்.
*******************
கடலில் விழுகிற நீர்த்துளிக்கு
எந்த தனித்தன்மையும் இல்லை!!
தாமரை இதழில் விழுந்த
நீர்த்துளிக்கு முத்துபோல் ஒளிரும் தன்மையுண்டு!!
உங்கள் திறமைகளை நிரூபிக்கும்
இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள்.
****************
வைர வரிகள் ஜொலிக்கும் .....
0 comments:
Post a Comment