twitter

                                      பிரவுசிங் செய்கையில் சில தளங்களில் பின்னணி இசை மற்றும் வேறு வகையான எச்சரிக்கை ஒலிகள் வரும் வகையில் கோப்புகளை பதிந்திருப்பார்கள். ஒரு தளத்தை பார்க்கும் போது, இந்த ஒலிகள்  நம் கவனத்தை திருப்பும். அந்த தளம் மூடப்பட்டால் தான் ஒலி நிற்கும்.
இந்த ஒலியை நிறுத்துவதற்கு ஒரு செட்டிங்ஸ் உள்ளது.


1. Internet Explorer என்பதைத் திறக்கவும்.

2. Tools மற்றும் Internet Options செல்லவும்.

3. Advanced டேப் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

4. Play Sounds in Web pages என்பதன் அருகிலுள்ள டிக் குறியை எடுத்து விடவும்.

5. Ok அழுத்தி வெளியேறவும்.

இனி தேவையில்லாத ஒலிகள் உங்களை தொல்லை செய்யாது.

பயர்பாக்ஸ், குரோம் போன்ற பிரவுசரை பயன்படுத்துபவர்கள் Tools -ல் சென்று ஆப்ஷனைத்தேடி மாற்றிக்கொள்ளவும்.

மீண்டும் ஒலி தேவையென்றால் இதே வழியில் ஆப்ஷனை மாற்றிக் கொள்ளவும்.
Jan 27, 2011 | 0 comments | Labels:

0 comments: