உங்கள் விண்டோவின் டைட்டில் பார் (மினிமம், மேக்ஸிமம், மற்றும் குளோஸ் பட்டன்கள் உள்ள மேலே உள்ள பார் ) வழக்கமாக நீல நிறத்தில் இருக்கும். இதனை வண்ணமயமாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா !
டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்ற பிரிவில் கிளிக் செய்யவும்.( விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 -ல் இது பெர்சனலைஸ் (Personalize) என்று இருக்கும்). பின்னர் டிஸ்பிளே செட்டிங்ஸ் காட்டப்படும். இந்த விண்டோவில் அப்பியரன்ஸ் டேப்பை தேர்ந்தெடுக்கவும் (விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 -ல் விண்டோஸ் கலர் அண்ட் அப்பியரன்ஸ் என்று இருக்கும்).
பின்னர் அட்வான்ஸ்டு என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் கீழாக ஆப்ஷன்ஸ் பாக்ஸ் திறக்கும் வகையில் உள்ள ஐட்டம் (Item) என்ற பாக்ஸில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில் ஆக்டிவ் டைட்டில் பார் (Title Bar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது இதற்கு வலது பக்கமாக இரண்டு கூடுதலாக ட்ராப் டவுண் பாக்ஸ் இருக்கும். அதில் கலர் 1 மற்றும் கலர் 2 எனத் தரப்பட்டிருக்கும். இதில் முதலாவது பெட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் கலர் தான் உங்கள் டைட்டில் பாரின் கலர். இரண்டாவதாக உள்ள பெட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் கலருக்குள் தான் முதல் கலர் மறையும். இதனை உங்கள் விருப்பப்படி அமைக்கலாம்.
எப்படி அமையும் என்பதனை முன்கூட்டியே அதே திரையில் காணலாம். இதன் உதவியுடன் வண்ணங்களை அமைத்து ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.
0 comments:
Post a Comment