விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் "சட்டப்படி குற்றம்" . இந்தப்படம் நிச்சயம் அரசியல் வட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சயை கிளப்பும்.
இந்தப்படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை காட்டப்படுகிறது. இந்தக் காட்சியில் வருபவர் ஆ.ராசாவின் முகச்சாயலில் இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞராக சீமான் நடிக்கிறார். ஆனால் ஊழல் தொகை எவ்வளவு தெரியுமா? 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி.
சத்யராஜ் இந்தப்படத்தில் புரட்சியாளர் சேகுவேரா வேடத்தில் நடித்து இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பல வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மகன்கள் செய்யும் அட்டகாசங்களும் காட்டப்படுகிறது.
நிறைய காட்சிகள் தற்கால அரசியலையும், குறிப்பாக ஆளுங்கட்சியினையும் தாக்கும் வகையில் உள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் தான் நடந்தது. அதில் இயக்குனர்கள் சங்கர், செல்வமணி, சீமான் மற்றும் நடிகர்ள் சத்தியராஜ், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுவாமிஜி நித்தியானந்தரின் திருவிளையாடலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. நிந்தியானந்தா வேடத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் பல சர்ச்சைகளை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
Mar 21, 2011, 9:47:00 AM
படம் வரட்டும் பார்க்களாம்..