twitter


                                                         சன் டிவி பேனரில் ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ள படம் தான் 'தென்னாட்டு புரூஸ்லி' தனுஷ் நடித்த "மாப்பிள்ளை "படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை நேற்று சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். அது இசை வெளியீட்டு விழாவா இல்லை தனுஷின் பெருமை பேசும் விழாவா என்றே தெரியவில்லை. வழக்கமாக "கலாநிதி மாறனை" புகழும் வாய்கள் அனைத்தும் தனுஷையே புகழ்ந்து கொண்டிருந்தது.                                                      சிறப்பு அழைப்பாளர்கள் என்று பார்த்தால் இராம நாராயணன், ஜெயம் ரவி மற்றும் பரத் மட்டுமே. பெரிய விருந்தினர்கள் யாரும் வரவில்லை . இவர்கள் பேசினால் தனுஷை புகழ்கிறார்கள். தனுஷ் பேசினால் அவர்களை புகழ்கிறார்.                                                         அட படத்தை பற்றியோ இசையமைப்பை பற்றியோ சொல்லுங்கடான்னா எவனும் அதப்பத்தி பேச மாட்டேங்கிறானுங்க. 


                                                    தனுஷ் ரொம்ப நல்லவரு, வல்லவரு, நாலுந் தெரிஞ்சவரு, அப்படி இப்படீன்னு கிழி கிழின்னு கிழிக்கிறானுங்க நம்ம காத!


                                                     ஒரு 150 காலேஜ் பசங்களை கூட்டியாந்து பின்னாடி உட்கார வச்சு கத்த விடுரானுங்க கேட்டா ரசிகர்னு சொல்லுரானுங்க. கடைசி வரைக்கும் போட்ட பிரியாணிக்கும், கொடுத்த காசுக்கும் விசுவாசமா நடந்துக்கிட்டானுங்க அந்த பசங்க.                                                   அப்புறம்  ஏண்டா  அதப்பாத்த சேனலை மாத்த வேண்டியதானே இல்லை டிவிய ஆப் பண்ண வேண்டியதானடா அப்படீன்னு ஒரு கேள்விய நீங்க என்னைப் பார்த்து கேட்கலாம். அதுக்கு காரணம் ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி தான் அது மட்டுமில்ல  மேடையில படத்தோட பாடல்களுக்கெல்லாம் டான்ஸ் ஆடின பொண்ணுங்க எல்லாம் ரொம்ப கிளாமரா ஆடினாங்க. ( ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு).


                                                    தனுஷோட மாமியாரா நடிச்சு இருக்கிறது நம்ம "மனிஷா கொய்ராலா" தான். டிரெய்லர்லேயே பார்க்க சகிக்கல. சரியா தூசி தட்டாம விட்டுட்டானுங்க போல. படம் எப்படியும் ஹிட்டாயிடும் இல்லைன்னா ஹிட் ஆக்கப்படும். தேர்தல்ல ஓட்டப் போட்டுட்டு ரிலாக்ஸா உட்காட்ந்து பார்கலாம்.


இயக்கம் : சுராஜ் (தலைநகரம், மருதமலை, படிக்காதவன்)


இசை : மணி சர்மா


Mar 28, 2011 | 27 comments | Labels: , , ,

27 comments:

 1. Raja=Theking
  Mar 28, 2011, 12:35:00 PM

  You are very correct. . . By www.kingraja.co.nr

 1. Raja=Theking
  Mar 28, 2011, 12:36:00 PM

  Heroine super

 1. ! சிவகுமார் !
  Mar 28, 2011, 12:48:00 PM

  // தேர்தல்ல ஓட்டப் போட்டுட்டு ரீலாக்ஸா உட்காட்ந்து பார்கலாம்.//

  ரிலாக்ஸா? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி மாப்ளே!

 1. தமிழ் 007
  Mar 28, 2011, 1:22:00 PM

  ///Raja=Theking said...

  You are very correct. . . By www.kingraja.co.nr

  Heroine super///

  ஹீரோயின் வெறும் சூப்பர் இல்ல சூப்பரோ சூப்பர்!

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

 1. தமிழ் 007
  Mar 28, 2011, 1:28:00 PM

  ///! சிவகுமார் ! said...

  // தேர்தல்ல ஓட்டப் போட்டுட்டு ரீலாக்ஸா உட்காட்ந்து பார்கலாம்.//

  ரிலாக்ஸா? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி மாப்ளே!///

  வாங்க மாப்பு!

  ஜெயிக்கப்போறது அம்மாவோ! ஐய்யாவோ! யாரு ஜெயிச்சாலும் இவங்ககிட்ட இருந்து தமிழ்நாட்ட நம்மால காப்பாத்த முடியாது.

  நாம்மால முடிஞ்சது நம்ம தொகுதியில நிக்கிறதுல ஒரு நல்ல புறம்போக்குக்கு ஓட்டுப்போடுறது தான்.

  அப்புறம் ஏன் நாம டென்சன் ஆகணும். ரிலாக்ஸா இருக்க வேண்டியது தான்.

 1. B.MURUGAN
  Mar 28, 2011, 3:41:00 PM

  மாப்பிள்ளை தனுஷ் தான். ஆனா மாமியார் வீட்டுக்கு போபோறது தேர்தலுக்கு முன்பு ராசா [நிரந்தரமாக]தேர்தலுக்கு பின்பு வேணாம் வம்பு.

 1. தமிழ் 007
  Mar 28, 2011, 3:54:00 PM

  ///B.MURUGAN said...

  மாப்பிள்ளை தனுஷ் தான். ஆனா மாமியார் வீட்டுக்கு போபோறது தேர்தலுக்கு முன்பு ராசா [நிரந்தரமாக]தேர்தலுக்கு பின்பு வேணாம் வம்பு.///

  சூப்பரு!

  வருகைக்கு நன்றி!

 1. அஞ்சா சிங்கம்
  Mar 28, 2011, 6:30:00 PM

  அடுத்த ஆட்சியில் அடக்கபடுவார்கள் என்று நம்புவோமாக ...........

 1. தமிழ் 007
  Mar 28, 2011, 8:55:00 PM

  ///அஞ்சா சிங்கம் said...

  அடுத்த ஆட்சியில் அடக்கபடுவார்கள் என்று நம்புவோமாக ...........///

  நீங்க சொன்னா சரி தான் நண்பா!

 1. ஜீ...
  Mar 28, 2011, 9:44:00 PM

  //வழக்கமாக "கலாநிதி மாறனை" புகழும் வாய்கள் அனைத்தும் தனுஷையே புகழ்ந்து கொண்டிருந்தது//

  இதைக்கூட சகிக்கலாம்! முன்பெல்லாம் கலாநிதிமாறன் பேர் சொல்லப்படும் போதேல்லாம் கைதட்டி ஆரவாரிக்கும் சவுண்ட் குடுப்பாங்க பாருங்க....என்ன சொல்றது?

 1. தமிழ் 007
  Mar 28, 2011, 10:59:00 PM

  ///ஜீ... said...

  //வழக்கமாக "கலாநிதி மாறனை" புகழும் வாய்கள் அனைத்தும் தனுஷையே புகழ்ந்து கொண்டிருந்தது//

  இதைக்கூட சகிக்கலாம்! முன்பெல்லாம் கலாநிதிமாறன் பேர் சொல்லப்படும் போதேல்லாம் கைதட்டி ஆரவாரிக்கும் சவுண்ட் குடுப்பாங்க பாருங்க....என்ன சொல்றது?///


  ஹிஹிஹி...ஹிஹிஹி

  க.க.போ.

  வருகைக்கு நன்றி நண்பா!

 1. பன்னிக்குட்டி ராம்சாமி
  Mar 29, 2011, 12:21:00 AM

  நல்ல வேள நான் பாக்கல...

 1. பன்னிக்குட்டி ராம்சாமி
  Mar 29, 2011, 12:23:00 AM

  //////ஜீ... said...
  //வழக்கமாக "கலாநிதி மாறனை" புகழும் வாய்கள் அனைத்தும் தனுஷையே புகழ்ந்து கொண்டிருந்தது//

  இதைக்கூட சகிக்கலாம்! முன்பெல்லாம் கலாநிதிமாறன் பேர் சொல்லப்படும் போதேல்லாம் கைதட்டி ஆரவாரிக்கும் சவுண்ட் குடுப்பாங்க பாருங்க....என்ன சொல்றது?///////////

  அட ஆமாங்க, தனுசாவது ஹீரோ, சவுண்டு கொடுக்கறாங்க, சரி தொலையுதுன்னு விட்ரலாம், ஆனா கலாநிதி மாறன் பேர் சொல்லும் போதெல்லாம் சவுண்டு வருது பாருங்க.... என்னத்த சொல்ல?

 1. தமிழ் 007
  Mar 29, 2011, 12:39:00 AM

  ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்ல வேள நான் பாக்கல...///

  போன பிறவியில ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கீங்க போல.

 1. செங்கோவி
  Mar 29, 2011, 1:13:00 AM

  ஒன்னுமில்லை..டன் டனா-ன்னு வர்றீங்களே..யாருன்னு பார்க்க வந்தேன்..படமெல்லாம் தூள் கிளப்புதே..மனீஷா ஸ்டில்லையே பார்க்க முடியலியே..படத்தை எப்படிப் பார்க்குறது..அதுவும் ஸ்ரீவித்யா இடத்துல இந்தப் பாட்டியா..கொடுமை..கொடுமை!

 1. ttpian
  Mar 29, 2011, 8:33:00 AM

  Forget&forgive this SKIN traders assosciation(sun TV)

 1. விக்கி உலகம்
  Mar 29, 2011, 10:02:00 AM

  அடங்கொன்னியா இப்பெல்லாம் பசங்க காலேஜுக்கு கட்டடிசாலும் துட்டு பாக்காம விடுறதில்ல போல மாப்ள ஹிஹி!

 1. தமிழ் 007
  Mar 29, 2011, 10:14:00 AM

  ///செங்கோவி said...

  ஒன்னுமில்லை..டன் டனா-ன்னு வர்றீங்களே..யாருன்னு பார்க்க வந்தேன்..படமெல்லாம் தூள் கிளப்புதே..மனீஷா ஸ்டில்லையே பார்க்க முடியலியே..படத்தை எப்படிப் பார்க்குறது..அதுவும் ஸ்ரீவித்யா இடத்துல இந்தப் பாட்டியா..கொடுமை..கொடுமை!///

  மிக்க நன்றி நண்பா!

  உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

 1. தமிழ் 007
  Mar 29, 2011, 10:15:00 AM

  ///ttpian said...

  Forget&forgive this SKIN traders assosciation(sun TV)///

  ரைட்டு!

  வருகைக்கு நன்றி நண்பா!

 1. தமிழ் 007
  Mar 29, 2011, 10:16:00 AM

  ///விக்கி உலகம் said...

  அடங்கொன்னியா இப்பெல்லாம் பசங்க காலேஜுக்கு கட்டடிசாலும் துட்டு பாக்காம விடுறதில்ல போல மாப்ள ஹிஹி!///

  ஆமா! மாப்பு ஆமா!

 1. ரஹீம் கஸாலி
  Mar 30, 2011, 11:18:00 AM

  வெளங்குன மாதிரிதான்

 1. சிவகுமாரன்
  Mar 30, 2011, 8:22:00 PM

  தனுஷ் என்னவோ பஞ்ச் டயலாக் பேசுவாரே நல்லவன் கெட்டவன்னு... சூப்பர் போங்க.

 1. தமிழ் 007
  Mar 31, 2011, 9:20:00 PM

  ///ரஹீம் கஸாலி said...

  வெளங்குன மாதிரிதான்///

  ரைட்டு....

 1. தமிழ் 007
  Mar 31, 2011, 9:25:00 PM

  ///சிவகுமாரன் said...

  தனுஷ் என்னவோ பஞ்ச் டயலாக் பேசுவாரே நல்லவன் கெட்டவன்னு... சூப்பர் போங்க.///

  வருகைக்கு நன்றி நண்பா!

 1. தமிழ்வாசி - Prakash
  Apr 13, 2011, 8:07:00 AM

  உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
  பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக

 1. செங்கோவி
  Aug 15, 2011, 2:09:00 AM

  என்ன பாஸ் ஆளைக் காணோம்?

 1. chicha.in
  Jul 7, 2012, 10:22:00 PM

  hii.. Nice Post

  Thanks for sharing