twitter


சில எஸ்.எம்.எஸ். -களை படிக்கும் போது

"  ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?"


"  11 பேர் கொண்ட குழு இருக்குமோ?" 


"முடியல"  


"  எப்படிப்பா !! இதெல்லாம்"


என்று கேட்கத் தோன்றும்.




                       ஆமா இதெல்லாம் யார் உருவாக்குறது? சத்தியமா நமக்கு அனுப்புறவன் உருவாக்கி இருக்க மாட்டான். இத தேட ஆரம்பிச்சா அவ்வளவு தான் அனுமன் வாலு மாதிரி போய்க்கிட்டே இருக்கும்.


                      இதில் ஒரு நன்மை என்னவென்றால்,சிரிக்க மறந்து போன இந்த அவரசர உலகத்தில் இன்னும் நமக்குள் அன்பையும், சிரிப்பையும் பாதுகாத்து வைத்திருப்பது குறுஞ்செய்திகள்(SMS) தான். குறுச்செய்திகள் என்பதை விட குறும்புச் செய்திகள் எனலாம்.


                       இரவு 2 மணிக்கு செய்தி அனுப்பி "தூக்கம் வராதோர் சங்கம் " என்பது போன்று மொக்கை போடாவிட்டால் சிலருக்கு தூக்கமே வாராது.

                    

              ஆனால் இது போன்ற செய்திகள் மற்றவர்களிடம் உங்களை காமெடியன் ஆக்குமே தவிர ஹீரோவாக ஆக்காது.



                       இது போன்ற மொக்கைகளும் அவ்வப்போது தேவை தான். ஆனால் முழுவதும் மொக்கையாகவே இருக்கக் கூடாது.

                 நீங்களாக யோசித்து அதை செய்தியாக (SMS) அனுப்பிப் பாருங்கள் அதில் அழகு  இல்லாவிட்டாலும், அதிலிருக்கும் உண்மை நிச்சயம் படிப்பவரை கவரும்.


                நல்ல வெற்றி சிந்தனையை தூண்டக்கூடிய செய்திகளை நண்பர்களிடம் பகிரலாம்.



                  இனி மேலாவது முடிந்தவரை சுயமாக எழுதிய செய்திகளை நண்பர்களுக்கு அனுப்பிப் பாருங்கள் அது ஒரு வார்த்தையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்பு பாருங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் தான் ஹீரோ. 



Jan 22, 2011 | 1 comments | Labels:

1 comments:

  1. நண்பர்கள் உலகம்
    Jan 31, 2011, 8:07:00 PM

    நண்பரே!
    என்னதான் சொல்ல வருகிறீர்கள்?