பிரபல வலைப்பதிவர்கள் சண்டை என வந்தால் என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்கள் என்று ஒரு கற்பனை .....
தமிழ்மணம் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும்
சி.பி.செந்தில் குமாரின் பஞ்ச் டயலாக்குகள்...
என் ப்ளாக் பேரு அட்ரா சக்க
ஏங்கிட்ட மோதினா நீ ஆயிடுவ வெறும் சக்க!
ஏ... ஊரு ஈரோடு பக்கம்
நான் அடிச்சா போயிடுவ ஆஸ்பத்திரி பக்கம்!
நான் எழுதுற ஜோக்கெல்லாம மொக்க
எமனே பயப்படுவான் என் எதிர்ல நிக்க!
ஜாக்கி சேகர் :
டேய் ஏம் பேரு ஜாக்கி
ஏங்கூட மோதினா போட்டுருவேன் தூக்கி
கேபிள் சங்கர் :
நான் எழுதுறது கொத்துப்பரோட்டா
ஏங்கிட்ட மோதினா உன்ன கொத்தி போட்டுருவேன் பரோட்டா!
நல்ல நேரம் ஆர்.கே. சதீஸ்குமார்
என் ப்ளாக் பேரு நல்ல நேரம்
ஏங்கிட்ட மோதினா உனக்கு கெட்ட நேரம்
#கவிதை வீதி# சௌந்தர்
நான் எழுதுறது கவிதை வீதியில
நான் அடிச்சா போய் விழுவ நடு வீதியில...
வேடந்தாங்கல் - கருன்
என் ஸ்டடி சென்டர் பேரு சக்தி
ஏங்கிட்ட மோதினா போட்டுருவேன் குத்தி
ஐய்யயோ! நான் ஏற்கனவே விஜய் மாதிரி சூப்பர் பஞ்ச் டயலாக் வச்சிருக்கேனே! என பீல் பண்ணுகிறவர்கள் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.
நான் என்ன பஞ்ச் டயலாக் பேசுறதுன்னு யாராவது என் கூட மோதும் போது எழுதலாமுன்னு விட்டுட்டேன். (ஹிஹி....ஹிஹி)
யாருக்காவது தில் இல்லைன்னா ஏங்கூட மோத வாங்க!
தில் இருந்தா அப்படியே போயிருங்க!
நானும் பிரபல பதிவர் தான் என்னைப்பத்தி ஏன் எழுதவில்லை என்று என்மேல் யாருக்காவது கோபம் வந்தால் நமீதாவின் முகத்திற்காகவாவது என்னை மன்னிக்கவும்.
Mar 6, 2011, 8:44:00 AM
1st cut